நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்ஆர்டி நிலையக் கழிப்பறையில் அத்துமீறல்: போக்குவரத்து நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா?

கோலாலம்பூர்: 

கடந்த வாரம் செந்துல் எல்ஆர்டி நிலையத்தில் உள்ள ஒரு பொது கழிப்பறையில், 43 வயதுடைய ஒரு பெண்ணை இழிவுபடுத்திய 22 வயதுடைய ஒரு உணவக ஊழியருக்கு, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,500 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.

மாஜிஸ்திரேட் ஐனா அஸாஹ்ரா அரிஃபின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 22 வயதுடைய அப்துல் சமாட் ஒஸ்மான் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அபராதம் செலுத்தத் தவறினால், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 8 மணியளவில், எல்ஆர்டி நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் இருந்தபோது, பாதிக்கப்பட்டவரின் மீது உளவு பார்த்து, அவரை இழிவுபடுத்தியதாக சமாட் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகின்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த அவரது வழக்கறிஞர் சிஎச் லோ, குறைந்த பட்ச தண்டனையை விதிக்குமாறு மனு செய்தார். தனது வாடிக்கையாளர் மாதம் 1,500 ரிங்கிட் மட்டுமே சம்பாதிப்பதாகவும், அவர் தனது பெற்றோரைப் பராமரிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டேன் என்று தனது வாடிக்கையாளர் உறுதியளித்ததாகவும், வருந்துவதாக வெளிப்படுத்தியதாகவும், நீதிமன்றத்திற்கும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் மன்னிப்புக் கோரியதாகவும் லோ கூறினார்.

துணை வழக்குத் தொடரும் அதிகாரி சியாஃபிகா அஸ்வா ஃபிக்ரி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஒரு பாடமாக அமையும் வகையில், குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை விதிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

பெண்களின் பாதுகாப்பும் மரியாதையும் எந்த நிலையிலும் சமரசப்படக் கூடாத அடிப்படை உரிமையாகப் பார்க்கப்பட கடுமையான தண்டனைகள் வழி செய்கின்றன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset