செய்திகள் மலேசியா
கம்போங் பஹாகியா மறுசீரமைப்பு: சட்டப்பூர்வமான கிராமமாக மாற்றச் சபா அரசு திட்டம்
சண்டாக்கான்:
இங்குள்ள கம்போங் பஹாகியா பகுதியை முறையாகச் சீரமைத்து, அதனை ஒரு சட்டப்பூர்வமான கிராமமாக மாற்றுவதற்குச் சபா மாநில அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துமீறிக் குடியேறியவர்களைக் கையாள்வதற்கும், நிலமற்ற உள்ளூர் மக்களுக்கு முறையான வீட்டு வசதிகளை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹஜிஜி நூர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தின் மூலம் நில உரிமையைப் பெற்று, முறையாகத் திட்டமிடப்பட்ட குடியிருப்புகளில் குடியேற்றப்படுவார்கள்.
இதன் மூலம் அந்தப் பகுதியில் நிலவும் சுகாதாரமற்ற சூழல், சமூகப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதேவேளையில், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இப்பகுதியைச் சட்டப்பூர்வமான கிராமமாக மாற்றுவதற்கான விரிவான அறிக்கையைத் தயாரிக்குமாறு சண்டாக்கான் நகராட்சி மன்றத்திற்கு (MPS) உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலமற்ற மக்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று ஹஜிஜி நூர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் சண்டாக்கான் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அழகியலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
ரவீந்திரன் பரமகுரு கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகிறார்
April 20, 2026, 3:18 pm
