நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின் தடை காரணமாக கேஎல்ஐஏ விமான நிலையத்தில் பயணப் பெட்டி கையாளும் அமைப்பு பாதிக்கப்பட்டது: போக்குவரத்து அமைச்சு

புத்ராஜெயா:

கடந்த சனிக்கிழமையன்று கேஎல்ஐஏ முனையம் 1-இல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணப் பெட்டி கையாளும் அமைப்பு பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சு இதனை  உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இடையூறுக்கான முக்கிய காரணத்தை விசாரணை கண்டறிந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், அமைப்பின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் உடனடி மற்றும் நீண்டகால தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் 18 அன்று மாலை சுமார் 4.54 மணியளவில், புக்கிட் ராஜா துணை மின் நிலையத்தில் இடையூறு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட மின்னழுத்த வீழ்ச்சி, கேஎல்ஐஏ விமான நிலையத்தின் செயல்பாடுகளைப் பாதித்தது.

இந்தக் கோளாறின் விளைவாக கட்டுப்பாட்டில் செயலிழப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிரதான அமைப்பு நின்றுபோனதுடன், புறப்படும், வரும் விமானங்களுக்கான பயணப் பெட்டிகளைக் கையாளும் பணியும் பாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset