நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டயாலிசிஸ் நோயாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பெட்டாலிங் ஜெயா: 

ஜனவரி மாதம் கோலா பிலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு இளம் நோயாளியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு டயாலிசிஸ் நோயாளிக்கு சிரம்பான் செஷன் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இன்று நீதிமன்றத்திற்குச் சக்கர நாற்காலியில் வந்த 60 வயதுடைய ஜூல்கெஃப்ளி ராணி மீது நீதிபதி சூரிதா புடின் தண்டனையை வழங்கியதாக சினார் ஹரியன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தேதியான ஏப்ரல் 16 முதல், தனது சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறு ஜூல்கெஃப்ளிக்கு உத்தரவிடப்பட்டது.

ஜனவரி 30 ஆம் தேதி, மதியம் 4 மணியளவில், கோலா பிலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், 16 வயதுடைய ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

2017 ஆம் ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a) கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 

துணை வழக்குத் தொடரும் அதிகாரி நூருல் பால்கிஸ் ஜுனைதி, ஜூல்கெஃப்ளியின் டயாலிசிஸுக்கான ஏற்பாடுகள் சிறை அதிகாரிகளால் கையாளப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset