செய்திகள் மலேசியா
உலகிலேயே மலேசியா முதலிடம் வகிக்கிறது: 77 சதவீத பெற்றோர்கள் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான 16 வயது வரம்பை ஆதரிக்கின்றனர்
கோலாலம்பூர்:
இந்த நாட்டில் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 16 வயதை நிர்ணயிப்பதை 77 சதவீத பெற்றோர்கள் ஆதரிக்கின்றனர்.
மலேசியா உட்பட 15 நாடுகளில் வர்கி அறக்கட்டளையால் நடத்தப்பட்ட 'ஃபேமிலி ஃபர்ஸ்ட்' அமைப்பின் உலகளாவிய ஆய்வின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது.
இலக்கவியல் தளத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஆதரிக்கும் நாடுகளில் மலேசியா முதலிடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் 75 சதவீதமும், அர்ஜெண்டினாவில் 55 சதவீதமும் பெற்றோர்கள் உள்ளனர்.
ஆனால் ஜப்பானில் 38 சதவீத பெற்றோர்கள் மட்டுமே குறைந்தபட்ச வயது வரம்பாக 16 வயதை நிர்ணயிப்பதை ஆதரிக்கின்றனர்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய 15 நாடுகள் அடங்கும்.
கூடுதலாக, ஜப்பான், கென்யா, மலேசியா, நைஜீரியா, ஸ்வீடன், ஐக்கிய அரபு அமீரகம், யுஏஇ, அமெரிக்கா ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.
இந்தக் கணக்கெடுப்பில் 6,002 பெற்றோர்களும், ஒன்பது முதல் 18 வயதுக்குட்பட்ட அவர்களது 6,011 குழந்தைகளும் பங்கேற்றனர்.
அதே நேரத்தில், இது அதே வயது வரம்பில் உள்ள குழந்தைகளின் 3,000 தாத்தா பாட்டிகளையும், ஜென் ஷெட் தலைமுறையைச் சேர்ந்த 3,000 பதிலளிப்பவர்களையும் உள்ளடக்கியது.
மலேசியாவில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் இந்த முயற்சிக்கு 62 சதவீத குழந்தைகளும் இளம் பருவத்தினரும் ஆதரவளிப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த உயர் விகிதமானது, 37 சதவீத குழந்தைகளும் இளம் பருவத்தினரும் மட்டுமே இதற்கு ஆதரவளித்ததாகக் காட்டிய உலகளாவிய ஆய்வு முடிவுகளுக்கு முரணாக உள்ளது.
இதற்கிடையில், மலேசியாவின் ஜென் ஷெட் தலைமுறையினரில் 65 சதவீதம் பேரும் இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
