செய்திகள் மலேசியா
ரவீந்திரன் பரமகுரு கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகிறார்
கோலாலம்பூர்:
நீதிபதிகளான ரவீந்திரன், அஸ்மி ஆகியோர் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெறவுள்ளனர்.
இவர்களின் பதவி உயர்வுகளின் மூலம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள 11 பதவிகளும் முதல் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவிந்திரன் பரமகுரு, அஸ்மி அரிபின் ஆகியோர், நாளை இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெறவுள்ள 14 நீதிபதிகளில் அடங்குவர்.
ஆறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற உள்ளனர்.
அவர்கள் நீதிபதிகள் டீன் வெய்ன் டேலி, அலிசா சுலைமான், அமர்ஜீத் சிங், செர்ஜித் சிங், ராட்ஸி ஹரூன், லத்திபா தஹார், அஹ்மத் ஷஹ்ரீர் சல்லே ஆவர்.
2023இல் நியமிக்கப்பட்ட நீதித்துறை ஆணையர்களான சுசானா சயீத், யூஸ்ரின் பைட்ஸ் யூசோப், அர்சியா அபண்டி, கான் டெச்சியோங், ஹசிசா காசிம், சூரியதி ஹசிமா ஹாஷிம் ஆகிய மேலும் ஆறு பேரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உறுதி செய்யப்படுவார்கள்.
ரவிந்தரன் 2009 ஜனவரி 5 அன்று நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2013இல் உயர் நீதிமன்றத்திற்கும், அதைத் தொடர்ந்து 2019இல் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் பதவி உயர்வு பெற்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
