செய்திகள் மலேசியா
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
கோலாலம்பூர்:
தென்கொரியாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தேடப்பட்டு வந்த அந்நாட்டு ஆடவர் ஒருவர், மலேசியாவில் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பதுங்கியிருந்த அவரை, குற்றப் புலனாய்வுத் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் வெளியிட்ட செராஸ் மாவட்ட போலிஸ் தலைமை உதவி ஆணையர் முஹம்மத் ரோஸ்டி தாவூத், கைது செய்யப்பட்ட நபர் மீது குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த ஆடவர் எவ்வளவு காலமாக மலேசியாவில் தங்கியிருந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தற்போது பிடிபட்டுள்ள நபர், தனது சொந்த நாட்டில் செய்த குற்றங்களுக்காக அங்கிருந்து தப்பி ஓடி மலேசியாவில் பதுங்கியிருந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாகத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள், மேலதிக விசாரணைகளை மலேசியப் போலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
May 18, 2026, 5:30 pm
