செய்திகள் மலேசியா
தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது: சுல்கிப்ளி அஹ்மத்
புத்ராஜெயா:
தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.
தேசிய சுகாதார, நோய்நிலை கணக்கெடுப்பு 2025 அடிப்படையில் தனியாக வசிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை 18.8% ஆக கணிசமாக அதிகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
இது 2018இல் இருந்த 6.3%-ஐ விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
தற்போது முதியோர்களின் எண்ணிக்கை 4.1 மில்லியனை எட்டியுள்ளது.
அவர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் தனியாக வசிப்பதால், அவர்கள் தொடர்ந்து மருத்துவ சேவைகளை நாடுவதில் போக்குவரத்துச் சிக்கல்கள் ஒரு பெரும் தடையாக உள்ளன.
இது வெறும் தளவாடப் பிரச்சினை மட்டுமல்ல. அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் ஒரு முக்கியக் காரணியாகும்.
தேசிய சுகாதார, நோய்நிலை கணக்கெடுப்பு 2025 ஆய்வறிக்கை வெளியீட்டு விழாவில் ஆற்றிய தனது உரையின்போது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
ரவீந்திரன் பரமகுரு கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகிறார்
April 20, 2026, 3:23 pm
