செய்திகள் மலேசியா
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
கோலாலம்பூர்:
இந்திராகாந்தி வழககில் புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது.
தனது மகளைக் கடத்திய முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக, ஐஜிபி, மூன்று பேருக்கு எதிராக ஆசிரியை எம். இந்திரா காந்தி தொடர்ந்த வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டத்தோ முகமது ஜைனி மஸ்லான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒருமனதாக அளித்த தீர்ப்பில்,
புதிய ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான தனது விருப்புரிமையைப் பயன்படுத்த நீதிமன்றத்திற்கு அனுமதிக்கும் எந்தவொரு சூழ்நிலையையும் அந்த மனு காட்டவில்லை என்று கண்டறிந்தது.
இந்த புதிய ஆதாரங்கள், முன்னர் கே. பத்மநாதன் என்று அறியப்பட்ட அவரது முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா, பூடி 95, சாரா ஆகியவற்றைப் பயன்படுத்தியது தொடர்பானவை.
டத்தோ பைசா ஜமாலுடின், டத்தோ முகமது ராட்ஸி அப்துல் ஹமீத் ஆகியோருடன் அமர்ந்திருந்த நீதிபதி முகமது ஜைனி, மேல்முறையீட்டில் மனுதாரரால் கோரப்பட்ட சாட்சியம் உயர் நீதிமன்ற விசாரணையின் போது கிடைக்கவில்லை.
மேலும் விசாரணை முடிவடைந்த பின்னரே சமீபத்தில் வெளிவந்தது என்றும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
May 18, 2026, 5:30 pm
