நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுக்மா விளையாட்டு போட்டியை ஒத்திவைக்கலாம்: சிலாங்கூர் சுல்தான்

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சுக்மா விளையாட்டு போட்டியை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம்.

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இதனை கூறினார்.

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி முடிவடையும் வரையிலும், ஷாஆலம் அரங்கம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் வரையிலும் சுக்மா போட்டியை நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும்.

இந்த விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி முடிவடையும் வரையிலும், ஷாஆலம் அரங்கத்தை முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் வரையிலும் போட்டிகளை நடத்துவதை ஒத்திவைப்பதே மிகவும் பொருத்தமானது என்று நான் நம்புகிறேன்.

லஅதே நேரத்தில், 2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர்,  சிங்கப்பூர் அணிகளுக்கு இடையேயான வருடாந்திர கால்பந்துப் போட்டியான சிலாங்கூர் சுல்தான் கிண்ண போட்டியை ரத்து செய்யவும் நான் உத்தரவிடுகிறேன்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset