நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைபிடிக்கக் கூடாது என்றதால் மோதல்: நாசி கண்டார் உணவகத்தில் கைகலப்பு

பெட்டாலிங் ஜெயா: 

ஏப்ரல் 15 ஆம் தேதி, தெலோக் பங்லிமா காராங், பண்டார் ரிம்பாயுவில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் புகைப்பிடித்ததற்காகக் கண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தகராறு மூண்டதாக நம்பப்படுகிறது.

கோலா லங்காட் போலிஸ் தலைவர் அக்மால்ரிசால் ராட்ஸி, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

ஒரு நபர் புகைப்பிடித்ததற்காகக் கண்டிக்கப்பட்ட பின்னர், இரண்டு குழுக்களுக்கிடையே தகராறு வெடித்ததாகவும், அது மோதலாக உச்சக்கட்டத்தை அடைந்ததாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகள் தெரிய வந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"தண்டனைச் சட்டத்தின் பிரிவு 160-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று அக்மால்ரிசால் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகவல் உள்ள பொதுமக்கள், அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவிக்குமாறும், அல்லது கோலா லங்காட் போலிஸ் தலைமையக நடவடிக்கை அறையை 03-3187 2222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்னர், உணவகத்தில் பலர் சண்டையிடுவதைக் காட்டும் 47-விநாடி சிசிடிவி காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இவ்விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset