நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு; மடானி அரசுக்கு நன்றி: டத்தோஸ்ரீ ஆறுமுகம்

கோலாலம்பூர்:

உலோக மறுசுழற்சி துறையில் நிலவி வந்த அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இவ்வேளையில் மடானி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மிம்தா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ செ. ஆறுமுகம் கூறினார்.

மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோகப் பொருள் மறுசுழற்சி வர்த்தகர்கள் சங்கத்தின் 25ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தை மைக்கி துணைத் தலைவர் டத்தோ ஏடி குமாரராஜா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் பேசிய டத்தோ ஆறுமுகம்,

கடந்த காலங்களில் உலோக மறுசுழற்சித்துறைக்கு அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் பெரும் சிக்கலை நாங்கள் எதிர்கொண்டு வந்தோம்.

ஆனால் இப்போது அந்த பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது.

இவ்வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் மடானி அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் மிம்தாவின் கட்டட கடன் இனி எந்த நேரத்திலும் தீர்க்கப்படும் நிலையில் உள்ளது. 

இது ஒருவரின் முயற்சி அல்ல. முன்னாள் தலைவர்கள், முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள், தற்கால செயற்குழு உறுப்பினர்கள், நமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் இதை சாத்தியமாக்கியது.

அனைவரும் ஒன்றாக இணைந்து  செயல்பட்டால் மட்டுமே இந்த வெற்றி கிடைத்தது. இந்த சங்கத்தின் கட்டட கடனை தீர்க்க பல வழிகளில் நிதி திரட்டப்பட்டது.

சங்க உறுப்பினர்களின் நேரடி நன்கொடைகள் இந்த முயற்சிக்கு முக்கிய காரணங்கள்.

இந்த தருணத்தில் அனைவரும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 30 லட்சம் வெள்ளி மதிப்பில் இந்த மூன்று மாடிக் கட்டடத்தை வாங்கினோம்.

இன்று இந்த கட்டடத்தின்  மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த கட்டடத்தை விற்று புதிய இடத்தில் புதிய கட்டடம் வாங்க. திட்டம் வைத்துள்ளோம்.
இந்த கட்டத்தில் மண்டபமும் இடம் பெறும். இந்த மண்டபம் மூலம் சங்கத்திற்கு வருமானம் கிடைக்கும்.

மேலும் இந்திய மாணவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கும் திட்டத்தையும் மிம்தா கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset