நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் முக்கிய நுழைவாயிலில் இப்படியொரு அலட்சியமா?: போக்குவரத்து அமைச்சகம் அவசர அழைப்பு

பெட்டாலிங் ஜெயா: 

நேற்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.) முனையம் 1-இல் பயணிகளின் பயண உடைமைகள் கையாளும் அமைப்பு செயலிழந்ததால், வெளியிடத்திலிருந்து வந்து சேரும் பயணிகளுக்கு நான்கு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சு அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

திங்கட்கிழமை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கூட்டத்தைக் கூட்டுமாறு, தனது அமைச்சின் தலைமைச் செயலாளருக்குத் தான் அறிவுறுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"விமான நிலையங்களில் செயலிழப்பு மேலாண்மையை நிர்வகிக்கும் தற்போதைய நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) முழுமையாக மறுபரிசீலனை செய்வது குறித்து அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். மேலும், kகுறித்த நேரத்தில் பயணிகளுக்குப் பதிலளிப்பது, பயணிகள் தகவல்தொடர்பு, எதிர்பாராத சம்பவங்களுக்கான நெறிமுறைகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தபடுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

செயலிழந்த பயணிகளின் பயண உடைமைகள் அமைப்பு அதே மாலையில் மீட்டெடுக்கப்பட்ட போதிலும், "ஒரு தொழில்நுட்ப திருத்தம் விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவராது, மேலும் இந்தச் சம்பவம், ஆழமான மட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது" என்று லோக் தெரிவித்தார்.

"நாட்டின் தேசிய நுழைவாயில் வழியாகப் பயணிக்கும் பயணிகள், நம்பகமான சேவைத் தரத்திற்குத் தகுதியானவர்கள்; இந்தச் சம்பவம் அந்தத் தரத்தைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது," என்று கூறிய அவர், ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்குமாறு மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சேவை விநியோகத்தில் இந்தத் தோல்விக்காக மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பிஹெச்டி மீது தண்டனை நடவடிக்கை எடுப்பது நியாயமானதா என்பதை ஆய்வு செய்யுமாறும் அவர் கூறினார்.

"மீண்டும் இவ்வாறான தவறுகளை தேசிய நுழைவாயில் சகித்துக்கொள்ள முடியாது. கே.எல்.ஐ.ஏ.-வின் ஆபரேட்டராக, இந்தச் செயலிழப்பிற்கு மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பிஹெச்டி பொறுப்பேற்க வேண்டும்.

"நிறுவனம் முழுவதும் ஒரு உண்மையான பொறுப்புணர்ச்சியும் கடமை உணர்வும் கொண்ட கலாச்சாரத்தை முதலில் வளர்க்காமல், உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக இருப்பதற்கான எங்கள் இலக்கை நிறைவேற்ற முடியாது" என்று அவர் ர்.தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset