செய்திகள் மலேசியா
உணவருந்தச் சென்ற இடத்தில் மீட்புப் பணியில் குதித்த வீரர்கள்
பெண்டாங்:
இங்குள்ள மஸ்ஜித் அல்-ஃபலா ஃபெல்டா சுங்கை தியாங்கிற்கு அருகிலுள்ள ஒரு உணவகப் பகுதியில், நேற்று ஒரு உணவுக் கடை தீப்பிடித்ததில், இரண்டு பெண்களை மீட்பதில் இரண்டு தீயணைப்பு அதிகாரிகள் வெற்றி பெற்றனர்.
சம்பந்தப்பட்ட உணவுக் கடையின் சமையலறையை மட்டுமே உள்ளடக்கிய அந்த தீ விபத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாலை 5.15 மணியளவில், சம்பந்தப்பட்ட இரண்டு தீயணைப்பு அதிகாரிகளான முஹம்மத் அதிர் மௌலா எசாஹா, முஹம்மத் அனாஸ் எலியாஸ், கெடா மாநில அளவிலான தீயணைப்பு கேடட் போட்டி தொடர்பான தங்கள் பணிகளை முடிப்பதற்கும், உணவருந்துவதற்கும் அந்த வளாகத்தில் தற்செயலாக இருந்தபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
ஆரம்பத்தில், தீப்பிழம்புகள் சாதாரண சமையல் நடவடிக்கைகளால் ஏற்பட்டதாக நினைக்கப்பட்டது. இருப்பினும், சமையலின் போது எரிவாயு குழாய் துண்டிக்கப்பட்டதால், திடீரென தீ ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
வேகமாக பரவிய தீயால் கடையிலிருந்து வெளியேறுவதில் அப்பெண்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அதே நேரத்தில், கடையின் அறைக் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அதைத் திறப்பதும் கடினமாக இருந்தது.
அப்போது, சம்பந்தப்பட்ட இரு தீயணைப்பு அதிகாரிகளும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற உதவுவதன் மூலம், மீட்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தினர்.
தீ, மற்ற வளாகங்களுக்குப் பரவுவதற்கு முன்பே, அது கட்டுப்படுத்தப்பட்டு, முழுமையாக அணைக்கப்பட்டது.
இரு பாதிக்கப்பட்டவர்களும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதையடுத்து, சமையல் உபகரணங்களின் இணைப்புகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறும், எதிர்பாராத சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வளாகங்களில் தீயணைப்பு கருவிகளை வைத்திருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
வேகமாகச் சென்ற காரில் சிக்கிய RM6 லட்சம் ரிங்கிட் போதைப்பொருள்: 33 வயது ஆடவர் அதிரடியாகக் கைது
April 21, 2026, 2:52 pm
ஹோர்முஸ் நீரிணை மூடல் அனைத்து ஆசியான் நாடுகளையும் பாதிக்கிறது: சுல்தான் நஸ்ரின்
April 21, 2026, 1:02 pm
14 நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்
April 21, 2026, 1:01 pm
மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் இல்லை என்பதை அரசு உறுதியளிக்கிறது: துணைப் பிரதமர்
April 21, 2026, 12:21 pm
“நீர்த் தட்டுப்பாடு வருமா?”: மீரி மக்களின் அச்சத்தைப் போக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
April 21, 2026, 12:09 pm
