நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் கீழ் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் இலவச டியூசன் வகுப்புகள்: டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு

சுங்கைபூலோ:

மித்ராவின் கீழ் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் டியூசன் வகுப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை அறிவித்தார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சுங்கைபூலோவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதே வேளையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

குறிப்பாக மித்ரா தர்ம மடானி திட்டத்தின் கீழ் ஆலயங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட நிதி கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 300க்கும் மேற்ப்பட்ட ஆலயங்களுக்கு நிதிகள் வழங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

மித்ராவின் புதிய திட்டமாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்காக மொத்தம் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

இலவசமாக வழங்கப்படும் இந்த டியூசன் வகுப்புகள் மாணவர்களுக்கு பெரும் பயனாக் இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

சுங்கைபூலோ வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் 7ஏக்கு மேல் எடுத்தால் அன்பளிப்புகள் வழங்கப்படும்.

ஆனால் இம்முறை 5ஏ அதற்கும் மேல் எடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset