நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை நிபோங் விரைவுச்சாலை நாளை திங்கட்கிழமை நான்கு மணி நேரம் மூடப்படும்

ஜார்ஜ்டவுன்: 

கிறிஸ்டல் பாயின்ட் எதிரே உள்ள சுங்கை நிபோங் விரைவுச்சாலை, இந்த திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் நான்கு மணி நேரம் முழுமையாக மூடப்படும்.

அந்தப் பாதையில் ஜாம்பத்தான் கெடுவா எஸ்டி பிஹெச்டிக்காக புதிய வேரியபிள் மெசேஜ் சைனேஜ்/எல்இடி போர்டை அகற்றுவதற்கும் நிறுவுவதற்குமான வேலைக்கு இடமளிக்கும் வகையில், இந்த மூடல் செய்யப்படுவதாகப் பினாங்கு பொதுப்பணித் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"புக்கிட் ஜம்புல் வட்டத்திலிருந்து குயின்ஸ்பே நோக்கிய திசையை நோக்கி சுங்கை நிபோங் விரைவுச்சாலையின் முழுவதுமாக மூடப்படும்.

"அதன்படி, சாலைப் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வாகனங்களை மெதுவாகச் செலுத்துமாறும், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பாதுகாப்பு அறிகுறிகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று நேற்றைய அறிக்கை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக சாலைப் பயனர்கள், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், தங்கள் பயணங்களை சிறப்பாகத் திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset