நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங், செராஸில் அதிரடி சோதனை; 31.57 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: போலிஸ்

கோலாலம்பூர்:

கடந்த வாரம் பூச்சோங், செராஸில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, வேப் கார்ட்ரிட்ஜ்களில் திரவமாக நிரப்பப்பட்ட ஃபென்டானைல் என்ற போதைப்பொருளைக் கடத்திய ஒரு கும்பலை போலிஸ் முறியடித்துள்ளது.

இந்த சோதனையில், திரவம் நிரப்பப்பட்ட சுமார் 400 வேப் கார்ட்ரிட்ஜ்கள் உட்பட, 31.57 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸோம்பி வகையான இந்த போதைப்பொருள் நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்கள் வழியாகக் கடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.

பூச்சோங்கில் உள்ள ஒரு பட்டறையிலும், செராஸில் உள்ள ஒரு வீட்டிலும் நடத்தப்பட்ட இந்த சோதனைகள் 31, 33 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களின் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருட்களின் மதிப்பு 31.57 மில்லியன் ரிங்கிட்  என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset