நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“85% மக்களுக்குப் பாதிப்பில்லை”: டீசல் விலை உயர்வு குறித்துப் பிரதமர் அன்வாரின் விளக்கம்

கோத்தா பாரு: 

நாட்டில் டீசல் விலை உயர்வினால் வெறும் 15 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். எஞ்சிய 85 சதவீத மக்கள் இன்னும் மானிய விலையிலேயே டீசலைப் பெற்று வருவதாகவும், அவர்கள் சந்தை விலைக்கு அதனை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர், போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சில பிரிவினர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டார். 

இருப்பினும், டீசல் விலை உயர்வினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் புகார்களை அவர் மறுத்தார். மீனவர்கள் தற்போதும் மானிய விலையிலேயே எரிபொருளைப் பெற்று வருவதால், அத்தகைய உதாரணங்களைக் கூறி மக்களைக் குழப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களின் சுமையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து அரசு நாள்தோறும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், தகுதியானவர்களுக்குத் தொடர்ந்து மானியங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றார். 

இந்த நிகழ்வில் போக்குவரத்துத் அமைச்சர் அந்தோணி லோக் கிளாந்தான் மாநில முதலமைச்சர் டத்தோ முஹம்மத் நசுருதீன் தாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset