செய்திகள் மலேசியா
புனிதப் பயணம் தொடக்கம்: மலேசிய ஹஜ் பயணிகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நெகிழ்ச்சியான வாழ்த்து
கோலாலம்பூர்:
இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மலேசியர்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை முதல் புனித பூமிக்கான பயணத்தைத் தொடங்கியுள்ள மலேசியப் பயணிகளின் முதல் குழுவிற்கு அவர் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்துத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், ஹஜ் கடமையானது தியாகம், உளத்தூய்மை, பொறுமை, இறைபக்தி ஆகியவற்றைக் கோரும் ஓர் உன்னதமான பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
புனித பூமியில் தங்கியிருக்கும் மலேசியப் பயணிகள் அனைவருக்கும் உடல் நலமும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்றும், அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளும் எளிதாக அமைய வேண்டும் என்றும் அவர் இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
புனிதப் பயணத்தை முடித்து தாயகம் திரும்பும்போது, அனைவரும் நற்பேறு பெற்றவர்களாகவும், இறைவனுக்கு நெருக்கமானவர்களாகவும் திரும்ப வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மலேசியாவிலிருந்து மொத்தம் 31,600 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்ற உள்ளனர். அதன் முதற்கட்டமாக, 284 பயணிகளைக் கொண்ட குழு இன்று அதிகாலை 4.05 மணிக்குக் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 3:01 pm
பாலோக் கடற்கரையில் சோகம்: விடுதியிலிருந்து வெளியேறிய மாணவர் மாயம்
April 18, 2026, 2:45 pm
ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் குறித்து பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம்: பிரதமர்
April 18, 2026, 2:42 pm
பேரா மாநிலத்தில் 200 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது: டத்தோ சிவநேசன்
April 18, 2026, 2:41 pm
மஇகா இன்னும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்புக் கட்சியாகவே நீடிக்கிறது: அஹ்மத் ஜாஹித்
April 18, 2026, 12:15 pm
உள்ளாடைகளைத் திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு
April 18, 2026, 12:08 pm
“85% மக்களுக்குப் பாதிப்பில்லை”: டீசல் விலை உயர்வு குறித்துப் பிரதமர் அன்வாரின் விளக்கம்
April 18, 2026, 10:47 am
