நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளாடைகளைத் திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு

ஈப்போ: 

கம்போங் தாசேக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உலர்த்தப்பட்டிருந்த உள்ளாடைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 12.51 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய நபர் மோட்டார் சைக்கிளில் வருவது பதிவாகியுள்ளது. 

இருப்பினும், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை என்று ஈப்போ மாவட்டக் காவல்துறைத் தலைவர் முஹம்மத் நஜிப் ஹம்சா தெரிவித்துள்ளார். அந்த நபர் வீட்டின் வெளியே உலர்த்தப்பட்டிருந்த உள்ளாடைகளைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்துள்ளார்.

தப்பியோடிய அந்த மர்ம நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், ஈப்போ மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தையோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset