நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா; 144 மாணவர்கள் பட்டம் பெற்றனர்: அன்பா

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில்  144 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்று தலைமை இயக்குநர் அன்பானந்தன் கூறினார்.

கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தரமான கல்வியின் மூலம் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்பது இக்கல்லூரியின் முதன்மை நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் கல்லூரியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது.

இது தான் இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவாகும்.

லோஜிஸ்டிக், மேலாண்மை துறையில் ஆக அதிகமாக 82 மாணவர்கள் டிப்ளோமா பட்டம் பெற்றனர்.

வணிக நிர்வாக துறையில்  45 மாணவர்களும், மென்பொருள் பொறியியல் துறையில் 6 மாணவர்களும்,  தகவல் தொழில்நுட்ப துறையில் 5 மாணவர்களும், கணக்கியல் துறையில் 6 மாணவர்களும் டிப்ளோமா பட்டம் பெற்றனர்.

இம்மாணவர்கள் டிப்ளமோ கல்வியுடன் நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் உயர் கல்விகளை படிக்க வேண்டும்.

இதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நாங்கள் ஊக்குவித்து வருவதாக பட்டமளிப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset