நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா இன்னும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்புக் கட்சியாகவே நீடிக்கிறது: அஹ்மத் ஜாஹித்

கோலாலம்பூர்:

மஇகா இன்னும் கூட்டணியின் ஓர் உறுப்பு  கட்சியாகவே நீடிக்கிறது.

தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது குறித்து அது ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

தேசியக் கூட்டணிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாகப் பிரச்சினை எழுந்தபோதிலும், கட்சித் தலைமை அந்த விஷயத்தை மறுத்துள்ளது.

இதுவரை, அவர்கள் தேசிய முன்னணி உறுப்பினர்களாகவே உள்ளனர்.

மேலும் இந்தக் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கிம்மாவின் 46ஆவது பொதுக் கூட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset