செய்திகள் மலேசியா
மத்திய கிழக்கு போர் பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த மலேசியா-ஆஸ்திரேலியா கூட்டாக இணைகிறது
புத்ராஜெயா:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் எரிசக்தி துறையில் தங்களது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள உறுதியளித்துள்ளன.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில், எரிசக்தி விநியோகத் தடை, விலை உயர்வு போன்ற விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முதலில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகு இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக விவரங்களை ஆராய, பெட்ரோனாஸ் (PETRONAS) நிறுவனத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு, தட்டுப்பாடு குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர்.
மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் எரிசக்தி தேவையில் ஒன்றையொன்று சார்ந்துள்ள நிலையில், வர்த்தக, பொருளாதார ரீதியாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதை இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியான காலத்தில், வலுவான நட்புறவின் மூலம் இரு நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இக்கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 3:23 pm
கம்போங் பஹாகியா மறுசீரமைப்பு: சட்டப்பூர்வமான கிராமமாக மாற்றச் சபா அரசு திட்டம்
April 20, 2026, 3:18 pm
இளைஞரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டயாலிசிஸ் நோயாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
April 20, 2026, 3:08 pm
அக்ஷய திருதியை முன்னிட்டு கோலாலம்பூரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை நிறுவப்பட்டது
April 20, 2026, 3:07 pm
துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியான சம்பவம்: கைதான முதியவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்
April 20, 2026, 3:07 pm
தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது: சுல்கிப்ளி அஹ்மத்
April 20, 2026, 3:05 pm
