செய்திகள் மலேசியா
லட்சக்கணக்கானப் பறவைகள் பறிமுதல்; ஆசைக்காகப் பறவைகளைச் சிறைவைத்த முதியவர் கைது
ஜொகூர் பாரு:
முறையான உரிமம் இன்றி 16 'முராய் பத்து' (Murai Batu) வகை பறவைகளைத் தனது வீட்டில் வளர்த்து வந்த 60 வயது முதியவர் ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.
ஜொகூர் பாரு, சிரின் பூங்காவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட 'ஓப் பெர்செபாடு கசானா' (Op Bersepadu Khazanah) எனும் அதிரடிச் சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மலேசியக் கூட்டரசு சேமிப்புப் படையினரும், (PSP) ஜொகூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் துறையினரும் இணைந்து நடத்திய இந்தச் சோதனையில், முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனத்தைச் சேர்ந்த 16 பறவைகள் கண்டெடுக்கப்பட்டன.
அந்தப் பறவைகளை வளர்ப்பதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ தேவையான எவ்விதச் சட்டப்பூர்வ ஆவணங்களையும் அந்த முதியவர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார்.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது, பறவைகளுடன் சேர்த்து பல்வேறு வகையான 16 பறவைக் கூண்டுகள், ஒரு கைப்பேசி, சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள், பொருட்களின் மொத்த மதிப்பு RM2,95,106 மலேசிய ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு 2010-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட முதியவர், விசாரணை முடியும் வரை போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இயற்கை வளங்களையும் அரிய வகை வனவிலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கத் தொடர் சோதனைகள் நடத்தப்படும் என அரச மலேசியக் காவல்துறை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 3:01 pm
பாலோக் கடற்கரையில் சோகம்: விடுதியிலிருந்து வெளியேறிய மாணவர் மாயம்
April 18, 2026, 2:45 pm
ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் குறித்து பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம்: பிரதமர்
April 18, 2026, 2:42 pm
பேரா மாநிலத்தில் 200 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது: டத்தோ சிவநேசன்
April 18, 2026, 2:41 pm
மஇகா இன்னும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்புக் கட்சியாகவே நீடிக்கிறது: அஹ்மத் ஜாஹித்
April 18, 2026, 12:15 pm
உள்ளாடைகளைத் திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு
April 18, 2026, 12:08 pm
“85% மக்களுக்குப் பாதிப்பில்லை”: டீசல் விலை உயர்வு குறித்துப் பிரதமர் அன்வாரின் விளக்கம்
April 18, 2026, 11:56 am
புனிதப் பயணம் தொடக்கம்: மலேசிய ஹஜ் பயணிகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நெகிழ்ச்சியான வாழ்த்து
April 18, 2026, 10:47 am
