நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனையில் நேர்ந்த மனிதாபிமானமற்ற செயல்: சிகிச்சையிலிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

சிரம்பான்: 

கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர், இன்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

ஜுல்கெஃப்லி அப்துல் ராணி என்ற அந்த முதியவர், சிரம்பான் நீதிமன்றத்தில் நீதிபதி முஹம்மத் கமில் நிஜாம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்வாக்குமூலத்தை அளித்தார்.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, கோலா பிலாவில் உள்ள துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியிடம், மாலை 4 மணியளவில் அந்த முதியவர் அநாகரீகமான முறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். 

இதனையடுத்து, 2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு வந்த அந்த முதியவர், தனக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதால் பிணைத் தொகையைக் குறைக்குமாறும் நீதிமன்றத்தில் முறையிட்டார். 

இதனைப் பரிசீலித்த நீதிபதி, 5,500 மலேசிய ரிங்கிட் பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், சாட்சிகளைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, தண்டனை விவரங்கள் குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர் நீதிமன்றத்திலேயே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset