செய்திகள் வணிகம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
கோலாலம்பூர்:
இரண்டாவது கட்ட அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, ரிங்கிட் இன்று வலுவடைந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 3.94 என்ற நிலையை எட்டியுள்ளது.
பிற்பகல் நிலவரப்படி, உள்ளூர் நாணயம், செவ்வாய்க்கிழமை நாணய மாற்று சந்தை மூடலின் போது இருந்த 3.9500 என்பதிலிருந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9430 ஆக வலுப்பெற்றது.
இருப்பினும், சர்வதேச நாணய நிதியம், அதன் சமீபத்திய முன்னறிவிப்பில், 2025 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக விரிவடைந்த பின்னர், 2026, 2027 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முறையே 3.1, 3.2 சதவீதமாகக் குறையும் என்று கணித்துள்ளதாக மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார்.
"ஈரானில் நடைபெற்று வரும் போரானதுப் பணவீக்க அழுத்தங்களை உயர்த்தும். அதே நேரத்தில், அதிகரித்த பாதுகாப்புச் செலவினங்கள், தற்காலிகமானது என்றாலும், ஜி.டி.பி-க்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். இருப்பினும், இது சமூகத் தேவைகளிலிருந்து வளங்களைத் திருப்பும் அபாயத்தை ஏற்படுத்தும்.
"எவ்வாறாயினும், அமெரிக்க டாலர் குறியீடு 0.25 சதவீதம் குறைந்து 98.121 புள்ளிகளாக இருந்தது. அதிகரித்த நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், ரிங்கிட் இன்று ஒரு குறுகிய வரம்பிற்குள் வர்த்தகமாகும் வாய்ப்புள்ளது" என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
செவ்வாய்க்கிழமை மூடலின் போது இருந்த 4.6567/6620 என்பதிலிருந்து, யூரோவுக்கு எதிராக 4.6520/6614 ஆகவும், 2.4847/4877 என்பதிலிருந்து, ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.4828/4880 ஆகவும் ரிங்கிட் வலுப்பெற்றுள்ளது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை மூடலின் போது இருந்த 5.3495/3556 என்பதிலிருந்து, பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.3522/3631 ஆக ரிங்கிட் பலவீனமானது.
இதற்கிடையில், ஆசியான் நாணயங்களுக்கு எதிராகவும் உள்ளூர் நாணயம் பெரும்பாலும் அதிகமாக வர்த்தகமானது.
செவ்வாய்க்கிழமை மூடலின் போது இருந்த 3.1053/1091 என்பதிலிருந்து, சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.1023/1091 ஆக உயர்ந்தது. 230.6/231.0 என்பதிலிருந்து, இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 230.2/230.8 ஆக உயர்ந்தது. மேலும், முன்னர் இருந்த 6.59/6.61 என்பதிலிருந்து, பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 6.58/6.60 ஆக மேம்பட்டது.
இருப்பினும், நேற்று மூடலின் போது இருந்த 12.3183/3397 என்பதிலிருந்து, தாய் பாட்டுக்கு எதிராக ரிங்கிட் 12.3211/3546 ஆக சரிந்தது.
தொடர்ந்து, இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 23.59 காசாக விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 93.16 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
