செய்திகள் மலேசியா
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி; மக்களின் நலனைப் பாதுகாப்பதே தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுவின் இலக்கு: பிரதமர் அன்வார்
புத்ராஜெயா:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை தொடர்ந்து தெளிவான திசையைத் தக்கவைத்து, மக்களின் நலனைப் பாதுகாப்பதே தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுவின் இலக்கு.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டம் தீவிரமடைந்து வரும், நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கையாள்வதில் ஒரு தெளிவான திசையை வகுத்துள்ளது.
மேலும் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒழுக்கத்துடனும் யதார்த்தத்துடனும் இருக்கும்.
அதே வேளையில், மக்களின் நலனைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.
மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிப்பதே தற்போதைய முக்கிய அணுகுமுறையாகும்.
வரும் மாதங்களில் விநியோகம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கான முன்கூட்டிய திட்டமிடல், பெட்ரோனாஸின் முக்கியப் பங்கு ஆகியவற்றால் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
அதே நேரத்தில், நெல் விவசாயிகள், சிறு விவசாயிகள், தனிப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் டீசல் மானிய உதவி வழங்குவதன் மூலம், விலை உயர்வுகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
மர்மமான தலைவலியால் வாடும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அவலம்
April 15, 2026, 12:28 pm
ஒரே கல்லில் மூன்று மாங்காய்: மோசடி கும்பலிடம் சிக்கி 53,000 ரிங்கிட்டை இழந்த அரசு ஊழியர்
April 15, 2026, 11:32 am
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் செய்ய பேராக் அரசு தயார்
April 15, 2026, 11:11 am
பிரதமருக்குப் பெருநாள் பரிசு: விமானப் படிக்கட்டில் இருந்து ஓடி வந்த பிரதமர்
April 15, 2026, 10:40 am
நிலையம் மூடப்படவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்: கே.பி.டி .என்
April 15, 2026, 10:32 am
அந்தமான் கடலில் பயங்கரம்: 250-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
April 15, 2026, 10:08 am
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் அதிரடி திட்டம்: 2 லட்சம் நெல் விவசாயிகள் பயன்பெறுவர்
April 15, 2026, 9:52 am
