நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலையம் மூடப்படவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்: கே.பி.டி .என்

கோலா திரங்கானு: 

இங்குள்ள கம்போங் புக்கிட் பாயோங்கின் எரிபொருள் நிலையம் விநியோகம் தீர்ந்ததால் மூடப்பட்டது என்ற வைரலான கூற்றுக்கு உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவீன அமைச்சகம் (கே.பி.டி .என்) மறுப்பு தெரிவித்துள்ளது.

விநியோகப் பற்றாக்குறையைத் தொடர்ந்து, அந்த எரிபொருள் நிலையத்தில் ஒன்று அல்லது இரண்டு பம்புகள் மட்டுமே மூடப்பட்டன என்று மாநில கே.பி.டி .என் இயக்குநர் முஹம்மத் முப்சி லாட் கூறியுள்ளார்.

அனைத்து பம்புகளும் எரிபொருள் இல்லாமல் இல்லை என்று நடத்தப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

"அந்த எண்ணெய் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர், விநியோகம் தீர்ந்ததால் எரிபொருள் நிலையம் முழுமையாக மூடப்பட்டது என்ற கூற்றையும் மறுத்தார்.

"விசாரணையில், அந்த எரிபொருள் நிலையம் இன்னும் செயல்பாட்டில் இருந்தது. இருப்பினும், விநியோகப் பற்றாக்குறை காரணமாக ஒன்று அல்லது இரண்டு பம்புகள் மட்டுமே மூடப்பட்டன," என்று அவர் கூறினார்.

மேலும், கடந்த ஜனவரி முதல், முறையற்ற நடவடிக்கைகளின் விளைவாக 10,595 ரிங்கிட் மதிப்பிலான மானியம் பெற்ற டீசல், பெட்ரோலைத் தாம் பறிமுதல் செய்ததாகவும் முப்சி தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset