நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மர்மமான தலைவலியால் வாடும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அவலம்

தும்பாட்: 

தொடர்ச்சியான தலைவலி, மயக்கம் காரணமாக 56 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் சே அப்துல் ரசாக் சே மஜித் என்பவர், தற்போது படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு மூக்குப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்த இவர், மீண்டும் மர்மமான உடல்நலப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். ஒரு காலத்தில் கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்டிருந்த இவரது உடல் எடை, தற்போது பசியின்மை, உடல்நலச் சிக்கல்களால் 40 கிலோவாகக் குறைந்துவிட்டது.

இவரது மனைவி ஜலினா மொஹைதீன் கூறுகையில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்தத் தலைவலி தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். பலமுறை மருத்துவமனைக்குச் சென்றும் இந்தத் தலைவலிக்கான முறையான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று ஜலினா கூறினார். 

நீண்ட நேரம் அமரவோ அல்லது எழுந்து நடக்கவோ முடியாத நிலையில் இருக்கும் ரசாக்கிற்கு, கேட்கும் திறனும் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் சுவையை உணர முடியாததால், உயிர்வாழ்வதற்காக மட்டுமே அவர் மென்மையான உணவுகளை உட்கொண்டு வருகிறார்.

தற்போது படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் இவருக்கு, வலி தாங்க முடியாத நேரங்களில், வலி நிவாரணி மாத்திரைகளே தற்காலிக தீர்வாக உள்ளன. தனது கணவரின் மருத்துவத் தேவைகளுக்கும், சக்கர நாற்காலி, இதர பராமரிப்புப் பொருட்களை வாங்குவதற்கும் போதிய வசதியின்றித் தவிக்கும் ஜலினா, பொதுமக்களின் நிதியுதவியை எதிர்நோக்கியுள்ளார். 

உதவ முன்வருவோர் 013-9905531 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது ஜலினாவின் பி.எஸ்.என் (BSN) வங்கிக் கணக்கிற்குத் தங்களது பங்களிப்பை வழங்கலாம்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset