செய்திகள் மலேசியா
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
கோலாலம்பூர்:
மலேசியாவில் 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில், மொத்தம் 4,276 குடும்ப வன்முறை வழக்குகள் சமூக நலத்துறையினால் (JKM) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக 3,929 பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ள வேளையில், 347 ஆண்கள் இந்த வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சட்ட, அமலாக்கப் பிரிவின் இயக்குநர் இஸ்மாயில் அருள்ராஜ் அமிருதீன் தெரிவித்துள்ளார்.
கோபம், குடும்பத் தகராறு, போதைப்பொருள் பழக்கம், நிதி நெருக்கடி, பொறாமை ஆகிய ஐந்து காரணங்களே இத்தகைய வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்துதல், உளவியல் ரீதியாகத் துன்புறுத்துதல், உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் விடுத்தல், பாலியல் ரீதியான கட்டாயப்படுத்துதல் எனப் பல பிரிவுகளின் கீழ் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் காவல்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள் இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு (IPO) அல்லது அவசரகாலப் பாதுகாப்பு உத்தரவைப் (EPO) பெற அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தல், மனநல ஆலோசனைகளை வழங்குதல் போன்ற சேவைகளையும் சமூக நலத்துறை மேற்கொள்கிறது.
சட்ட உதவி, நிதி உதவி தேவைப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களை உரிய அமைப்புகளிடம் பரிந்துரைக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 1:11 pm
ஆஸ்திரேலிய பிரதமர் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மலேசியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:38 pm
மர்மமான தலைவலியால் வாடும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அவலம்
April 15, 2026, 12:28 pm
ஒரே கல்லில் மூன்று மாங்காய்: மோசடி கும்பலிடம் சிக்கி 53,000 ரிங்கிட்டை இழந்த அரசு ஊழியர்
April 15, 2026, 11:32 am
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் செய்ய பேராக் அரசு தயார்
April 15, 2026, 11:11 am
பிரதமருக்குப் பெருநாள் பரிசு: விமானப் படிக்கட்டில் இருந்து ஓடி வந்த பிரதமர்
April 15, 2026, 10:40 am
நிலையம் மூடப்படவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்: கே.பி.டி .என்
April 15, 2026, 10:32 am
