நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்தமான் கடலில் பயங்கரம்: 250-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

டாக்கா: 

சுமார் 250-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா, வங்களாதேச அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அந்தமான் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வங்களாதேசத்தின் காக்ஸ் பஜார் கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக மலேசியா நோக்கிப் புறப்பட்ட இந்தப் படகு, மோசமான வானிலை, சீற்றமான அலைகள் காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்தது. 

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, அந்தமான் தீவுகளுக்கு அருகே தத்தளித்துக் கொண்டிருந்த 9 பேரை வங்காளதேசத்தின் கப்பல் ஒன்று மீட்டு போலிசாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்தே இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்தது.

மீட்கப்பட்டவர்களில் 6 பேர் மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய ரஃபிகுல் இஸ்லாம் என்ற அகதி கூறுகையில், படகில் சுமார் 280 பேர் இருந்ததாகவும், இட நெருக்கடி, மூச்சுத்திணறல் காரணமாகப் படகு கவிழ்வதற்கு முன்பே 25 முதல் 30 பேர் வரை உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். படகில் பயணித்தவர்களில் 150-க்கும் மேற்பட்டோர் ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை (UNHCR), ரோஹிங்கியா மக்களின் நீண்டகாலப் இடப்பெயர்வுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. 

மியான்மரில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாகப் வங்களாதேச முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள சுமார் 13 லட்சம் ரோஹிங்கியா மக்கள், பாதுகாப்பற்ற கடல் பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்க சர்வதேச சமூகம் நிதி, மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset