நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்

கோலாலம்பூர்: 

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலால் ஏற்பட்ட தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து, தமது அனைத்து நிலையங்களிலும் எரிபொருள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அதன் விநியோகச் சங்கிலியைத் தொடர்ந்து தீவிரமாக நிர்வகிக்கும் என்று பெட்ரோனாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோனாஸ் அதன் பொதுப் பட்டியலிடப்பட்ட துணை நிறுவனமான பெட்ரோனாஸ் டாகாங்கான் பெர்ஹாட் மூலம், நாட்டின் எரிபொருள் தேவைகளில் சுமார் 50 சதவீதத்தை வழங்குகிறது.

மீதமுள்ள விநியோகம் மலேசியாவில் செயல்படும் பிற எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மலேசியர்களுக்கும் நிலையான, நம்பகமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான அதன் அர்ப்பணிப்பை பெட்ரோனாஸ் தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்துள்ளது.

"தினசரித் தேவைகளுக்கு ஏற்ப, பொதுமக்கள் நியாயமான முறையில் எரிபொருளை வாங்குமாறும், அதிகப்படியான அல்லது பீதியுடன் வாங்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

"பொறுப்பான பயன்பாடு, அனைவருக்கும் விநியோகம் தொடர்ந்து போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய உதவும்" என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset