நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரே கல்லில் மூன்று மாங்காய்: மோசடி கும்பலிடம் சிக்கி 53,000 ரிங்கிட்டை இழந்த அரசு ஊழியர்

கோலா திரங்கானு: 

இணையத்தின் மூலம் செயல்படும் மோசடி கும்பல், போலியான ஆலோசகர் ஒருவரின் வஞ்சக யுக்தி, இல்லாத கடன் சலுகை ஆகியவற்றின் சதியில் சிக்கிய அரசு ஊழியர் ஒருவர், மொத்தம் 53,035.49 ரிங்கிட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதுடைய பாதிக்கப்பட்டவர், கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) ஒரு காரை விற்பனை செய்வதற்கான பேஸ்புக் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டதால் இவ்வசம்பாவிதத்திற்கு ஆளானதாக கோலா திரங்கானு மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் அஸ்லி முஹம்மத் நூர் தெரிவித்தார்.

சந்தேக நபரைத் தொடர்பு கொண்ட பின்னர், பாதிக்கப்பட்டவர் அந்தக் காரை வாங்கும் ஆசையில் ஐந்து வெவ்வேறு வங்கிகளுக்கு ஆறு முறை 15,955.49 ரிங்கிட்டை செலுத்த ஒப்புக்கொண்டார்.

"இருப்பினும், கார் வாங்கும் பரிவர்த்தனையில் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பாதிக்கப்பட்டவர், எழுந்த பிரச்சினையைத் தீர்க்க, ஆலோசகர் சேவைகளைப் பெற மீண்டும் பேஸ்புக்கை நாடியுள்ளார்.

"ஏப்ரல் 11 ஆம் தேதி, பேஸ்புக்கில் ஒரு ஆலோசகர், அதிகாரியாக நடித்த சந்தேக நபருக்கு 7,280 ரிங்கிட் செலுத்தியுள்ளார். அதே நேரத்தில், காரை வாங்கும் பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டவர் மேலும் இணையத்தில் கடன் வாங்க முயன்றும் உள்ளார்," என்றார் அவர்.

கடன் வாங்க விரைந்த பாதிக்கப்பட்டவர், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில், ஒரு நிர்வாகக் கட்டணமாகக் கூறப்பட்ட தொகையாக, ஒரு போலி பணம் கடன் வழங்கும் கும்பலிடம் 29,800 ரிங்கிட்டை இழந்ததாக அஸ்லி கூறினார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர், செவ்வாய்க்கிழமை மதியம் 4.29 மணியளவில் பாதிக்கப்பட்டவர் போலிஸில் புகார் அளித்தார்.

"பாதிக்கப்பட்டவர் அவரது சேமிப்பு, அவரது குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட பணத்தால் தாம் இவ்வளவு பெரிய தொகையைக் காருக்காக இழந்துள்ளதாக தெரிவித்தார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset