செய்திகள் மலேசியா
பெட்ரோல் நிலையங்களில் இருப்பு தீர்ந்துபோவது என்பது அரிதான சம்பவம் மட்டுமே: அந்தோனி லோக்
புத்ராஜெயா:
பல பெட்ரோல் நிலையங்களில் இருப்பு தீர்ந்து விட்டது என்ற கூற்றுகள் நாட்டின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை.
அவை தனிப்பட்ட சில சம்பவங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன.
மலேசியா ஒரு பொதுவான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பதற்கான அறிகுறியாக இந்தப் பிரச்சினையைக் கருதக்கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வலியுறுத்தினார்.
அவை தனிப்பட்ட சம்பவங்கள் என்று நான் நினைக்கிறேன். இது பிரச்சினை விநியோகம் இல்லாததால் அல்ல.
ஒருவேளை விநியோகம் போன்ற விஷயங்களில், சில பெட்ரோல் நிலையங்களில் இருப்பு தீர்ந்து போயிருக்கலாம்.
மேலும் விநியோகஸ்தர்களிடமிருந்து விநியோகத்தில் சிக்கல் இருக்கலாம்.
அதனால் மலேசியாவில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டது என்று அர்த்தமல்ல என்று அவர் இன்று போக்குவரத்து அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, இருப்பு தீர்ந்ததும் தானாகவே நிறுத்திக்கொள்ளும் அமைப்பு பெட்ரோல் நிலையத்தில் இல்லாததால், டீசல் இருப்பு தீர்ந்துவிட்ட போதிலும், பம்ப் மீட்டர் தொடர்ந்து கட்டணத் தொகையைப் பதிவு செய்த ஒரு சம்பவம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:38 pm
பெட்ரோல் மானியங்கள் விவகாரத்தில் பழைய மூட நம்பிக்கைகளுடன் நம்மால் வாழ முடியாது: ரபிசி
April 14, 2026, 3:20 pm
