நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன

சைபர்ஜெயா:

நான்கு உயர் மதிப்பு ஓவியங்கள் வெற்றிகரமாக  மீட்கப்பட்டு, புத்ராஜயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இதனை அறிவித்துள்ளது.

உள்ளூர் அமலாக்க முகமைகள், அனைத்துலக  மூலோபாய கூட்டாளிகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் மலேசிய அரசாங்கம் மேற்கொண்டது.

இதன்  தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, 1 எம்டிபி நிதி முறைகேடு தொடர்பாக வெற்றிகரமாக மீட்கப்பட்ட சொத்துக்களில் இந்தக் கலைப்படைப்புகளும் அடங்கும் என்று எம்ஏசிசி இன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய இந்தக் கலைப்படைப்புகளின் மொத்த மதிப்பு சுமார் 786,556.25 மலேசிய ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் ஜோன் மிரோ – கம்போசிஷன் (1953); மாரிஸ் உட்ரிலோ – மெய்சன் டி ரெண்டெஸ்-வூ டி சாஸ் டி ஹென்றி IV, ரூ செயின்ட் வின்சென்ட், மான்ட்மார்ட்ரே (1934); பால்டஸ் – எட்யூட் போர் ஃபெம் கூஷே (1948) மற்றும் பாப்லோ பிக்காசோ – எல் எகுயேர் எட் லெஸ் க்ளவுன்ஸ் (1961) ஆகியவை அடங்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset