நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்

ரெம்பாவ்:

ஹோர்முஸ் ஜலசந்திக்கு உள்ளேயும் வெளியேயும் கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தனது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு மலேசியா அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

ஏனெனில் இந்த நடவடிக்கை எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து, அதன் மூலம் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கக்கூடும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, வர்த்தக மற்றும் சரக்குக் கப்பல்கள் பாரசீக வளைகுடாப் பகுதிக்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கக்கூடும்.

இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ  முஹம்மத் ஹசான்  கூறினார்.

இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது முன்மொழியப்பட்ட 10 அம்சங்களுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் மட்டுமே ஜலசந்தியைத் திறக்க ஈரான் முன்பு ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

எனவே, ஹோர்முஸ் ஜலசந்தியைத் தடுப்பதில் அமெரிக்காவின் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

ஏனெனில், ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஐரோப்பிய நாடுகளை ஒத்துழைப்புக்கு அழைத்து வர வேண்டும் என்று அவர்கள்தான் கூச்சலிடுகிறார்கள்.

ஆனால் இப்போது அவர்களே ஜலசந்தியைத் தடுக்கவும் விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset