செய்திகள் மலேசியா
பெட்ரோல் மானியங்கள் விவகாரத்தில் பழைய மூட நம்பிக்கைகளுடன் நம்மால் வாழ முடியாது: ரபிசி
கோலாலம்பூர்:
முன்பு போல மானியங்களைத் தாங்குவதற்கு நாட்டிற்கு இன்னும் அதிக இடம் இருக்கிறது என்று கருதி, மலேசியர்கள் இனி பழைய மூடநம்பிக்கைகளுடன் வாழ முடியாது.
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இதனை வலியுறுத்தினார்.
2008 ஆம் ஆண்டின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசலைப் பொறுத்தவரை, நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்றைய மலேசியா 2008 ஆம் ஆண்டின் மலேசியா அல்ல.
கடந்த காலத்தில், நமது கச்சா எண்ணெய் உற்பத்தி உள்நாட்டு நுகர்வை விட மிக அதிகமாக இருந்தது. உண்மையில் ஒரு கையிருப்பு இருந்தது.
இப்போது இல்லை. நமது எண்ணெய் உற்பத்தி ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 700,000 பீப்பாய்களில் இருந்து இப்போது ஒரு நாளைக்கு சுமார் 340,000 பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
ஆனால், பெட்ரோல், டீசல் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி இது ஒரு நாளைக்கு சுமார் 480,000 பீப்பாய்களாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:20 pm
