நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிக்கு முன் சண்டையிட்டதாக இரண்டு பெண்கள், 12 வயது சிறுவன் உட்பட  14 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

ஜொகூர்பாரு:

ஸ்கூடாய், பண்டார் செலேசா ஜெயாவில் ஒரு பள்ளிக்கு முன் சண்டையிட்டது, காயம் ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 14 மாணவர்கள் இரண்டு பெண்கள் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நபிலா நிஜாம் முன்னிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்த பிறகு, 12 முதல் 16 வயதுக்குட்பட்ட மொத்தம் ஆறு மாணவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அதே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மற்ற எட்டு மாணவர்கள் தங்கள் குற்றத்தை மறுத்து வாதிட்டனர்.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், அவர்கள் சண்டையிடுதல் மற்றும் வன்முறையைப் பயன்படுத்தும் கலவரக் குற்றத்தைச் செய்தல் ஆகிய கூட்டு நோக்கத்துடன் சட்டவிரோதமாகக் கூடியிருந்தவர்களில் அடங்குவர்.

இந்தச் செயல், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணிக்கு, ஸ்கூடாய், பண்டார் செலேசா ஜெயா, ஜாலான் சிலாட் லிங்காவில் உள்ள இடைநிலைப் பள்ளிக்கு முன்னால் நிகழ்த்தப்பட்டது.

இந்தச் செயலுக்காக, அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் 147ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் அனைவருக்கும் எச்சரிக்கையுடன் விடுதலை, நன்னடத்தைப் பிணைப்பத்திரம், அபராதம் செலுத்துதல், சமூக சேவை உத்தரவு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கு அனுப்புதல் அல்லது ஹென்றி கர்னி பள்ளிக்கு அனுப்புதல் போன்ற தண்டனைகள் வழங்கப்படலாம்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆறு பேரிடமிருந்து ஒழுக்க அறிக்கை, உண்மைகள் மற்றும் உத்தரவுகளைப் பெறுவதற்காக ஏப்ரல் 29ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

அதே சமயம், மற்ற எட்டு பேருக்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் வழக்கறிஞர்களை நியமிக்கவும் அதே தேதி நிர்ணயிக்கப்பட்டது.

அனைத்து மாணவர்களுக்கும் தலா 800 ரிங்கிட் பிணைத்தொகையுடன் ஒரு ஜாமீன்தாரருடன் பிணை வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset