நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது?: இந்திய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

கோலாலம்பூர்:

நாட்டில் நிலவும் கல்வி உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய இளைஞர்கள் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

அதில் ஒரு கட்டமாக கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமை கட்டடத்தின் நேதாஜி மண்டபத்தில் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

கூட்டரசு பிரதேச மஇகா ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கை தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொண்டு நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் 150க்கும் அதிகமான இந்திய இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்று கூட்டரசு பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

எங்கள் ஏற்பாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மஇகா உறுப்பினர்கள் அல்லாத இந்திய இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தினோம்.

நாட்டில் இன்று கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகள் பற்றிய உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும் அவர்களின் மன ஓட்டங்கள், எண்ணங்களை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைந்தது என்றும் ராஜா சைமன் கூறினார்.

மஇகா கல்வி பிரிவு தலைவர் டத்தோ நெல்சன், டத்தோ சிவராஜ், இளைஞர் பிரிவு தலைவர் அரவிந்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.  இந்நிகழ்ச்சியை டத்தோ ஏ.டி.குமரராஜா வழிநடத்தினார்.

இதற்கிடையே இன்று நமது இந்திய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் மூழ்கி கிடக்கின்றன. டிக்டாக் போன்ற இணையங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டு கிடக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் பற்றி தெரிய வந்திருக்கிறது. அவற்றுக்கு எப்படி தீர்வு காண்பது பற்றியும் எங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற விழிப்புணர்வு கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புத்ரி பிரிவின் ரீனா, நிவாஷினி ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset