நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன

கோலாலம்பூர்:

2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்த சில நாட்களுக்குப் பிறகு, டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் இல்லத்திலிருந்து அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு பல ஆரஞ்சு நிறப் பைகளும் பெட்டிகளும் கொண்டு செல்லப்பட்டதை போலிசார் கண்டனர்.

 புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் அமர் சிங் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு சாட்சியமளித்தார்.

2017 முதல் 2018 வரை இத்துறையின் தலைவராக இருந்த அவர்,

மே 11 முதல் 12 வரையிலான இரண்டு நாட்களில், 23 நபர்கள் இந்தப் பொருட்களை நகர்த்துவதில் ஈடுபட்டிருந்ததை பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் காட்டுவதாகக் கூறினார்.

மேலும், இந்தப் பொருட்களைக் கொண்டு செல்ல அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பவிலியன் குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளில், இரண்டு பணிப்பெண்களும் மேலும் பல நபர்களும் யூனிட் 45க்கு பொருட்களைக் கொண்டு வருவதை எனது துணைவரான அஹ்மத் நூர்தீன் இஸ்மாயில் பார்த்ததாக எனக்குத் தெரிவித்தார் என்று அவர் கூறினார்.

மேலும், அந்த நேரத்தில் அந்த யூனிட் புதுப்பிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரோஸ்மா மன்சோருக்கு எதிராக லெபனான் நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங் தாக்கல் செய்த வழக்கில் மூன்றாம் தரப்பினராகப் பெயரிடப்பட்டிருந்த காவல்துறை சார்பாக அமர் சாட்சியம் அளித்துக்கொண்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset