நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகழ் பெற்ற இந்தியப் பாடகி ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர்:

புகழ்பெற்ற இந்தியப் பாடகி ஆஷா போஸ்லேவின் மறைவு இசை உலகிற்கும் உலகளாவிய கலாச்சாரத்திற்கும் ஒரு பெரும் இழப்பு.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு வர்ணித்தார்.

இன்று முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவில், மறைந்தவர் தனது ஆயிரக்கணக்கான கலைப் படைப்புகள் மூலம் உணர்ச்சி, பாரம்பரியம், வரலாறு ஆகிய கூறுகளை வெற்றிகரமாக ஒன்றிணைத்த ஒரு அசாதாரணமான கலை ஆளுமை என்று அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவின் கலைப் பொக்கிஷங்களில் தங்கள் குடும்பத்தின் பெரும் பாரம்பரியத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்திய லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற முறையில் மறைந்தவரின் அந்தஸ்தையும் டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

காலத்தின் மாறிவரும் அலைகளுக்கு மத்தியிலும், தனக்கென ஒரு கலை அடையாளத்தை உருவாக்கி, தலைமுறைகளைக் கடந்து எப்போதும் பொருத்தமானவராக இருந்த மறைந்தவரின் துணிச்சலை அவர் பாராட்டினார்.

நாட்டின் சார்பாக பிரதமர் மறைந்தவரின் குடும்பத்தினருக்கும், இந்தத் துயரச் செய்தியால் பாதிக்கப்பட்ட அனைத்து கலை ஆர்வலர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset