நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

சிங்கப்பூர் ஆண்டியப்பன் எழுதிய வாமனத் தீவு சிங்கப்பூரின் அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களை இலக்கிய வடிவில் பதிவு செய்யும் தனிச்சிறப்பைக் கொண்ட நூல்.

தலைநகரில் அந்த நூலைத் தலைமையேற்று வெளியீடு செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

திருமாலின் வாமன அவதாரம் எப்படி விஸ்வரூபம் எடுத்து நின்றதோ அதுபோல, சிறிய தீவாகத் தோன்றிய சிங்கப்பூர் உலக அரங்கில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்ற நாடாக வளர்ந்தது என்பதை வாமனத் தீவு என்ற தலைப்பே நமக்குப் புலப்படுத்துகிறது.

இந்த நூல் வரலாற்றுத் தகவல்களை மட்டும் வழங்கவில்லை, ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது.

சிறிய தீவாகத் தொடங்கிய சிங்கப்பூர், இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மனித உழைப்பாலும் உறுதியாலும் தான். அந்த சிறப்பைத் தாங்கி நிற்கும் வாமனத் தீவு வெற்றி பெற வாழ்த்துகள் என்றூ டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset