நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது

புத்ராஜெயா:

நாடு முழுவதும் 200,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், நாளை முதல் அமலுக்கு வரும் வீட்டிலிருந்து பணி புரியும் விதிமுறைகளில் ஈடுபடுவார்கள்.

இருப்பினும் இது தகுதிகள், துறைத் தலைவர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் கூறினார்.

ஆனால் எல்லோராலும் இதில் ஈடுபட முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணங்கள் உள்ளன.

வீட்டிலிருந்து பணிபுரியும் முறைக்கான ஒப்புதல் துறைத் தலைவர்களின் கீழ் உள்ளது என்று பொதுத்துறை புத்தாக்கம் 2026 திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு சந்தித்தபோது அவர் கூறினார்.

அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அரசாங்கம் அனுமதித்தாலும், அது நிர்வாகச் செயல்திறனைப் பாதிக்காது என்று ஷம்சுல் நம்பிக்கை தெரிவித்தார்.

வீட்டிலிருந்து பணிபுரியும் காலத்தில் அரசு ஊழியர்கள் படுத்துக் கொள்ளவோ, உட்கார்ந்து ஓய்வெடுக்கவோ மாட்டார்கள்.

மேலும் அவர்கள் பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் வாங்கவும் மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நாம் திட்டமிட்டுள்ள அசல் திட்டங்களில் எதையும் தாமதப்படுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ இந்த திட்டத்தை செயல்படுத்துவதை ஒரு சாக்காகப் பயன்படுத்த முடியாது என்று ஷம்சுல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset