செய்திகள் மலேசியா
துர்நாற்றம் வீசியதால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்: பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி சடலமாக மீட்பு
கெடா:
சுங்கைப்பட்டாணி, தாமான் ரியா ஜெயா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 69 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இன்று காலை 9 மணியளவில் அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இரண்டாவது அறையில் கட்டிலுக்கு அருகில் மூதாட்டியின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்த அந்த மூதாட்டி, அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வழக்கமாக அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் வழக்கம் கொண்ட அவர், கடந்த சில நாட்களாக வெளியே வராதது குறித்து அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர்.
உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கோலா மூடா மாவட்டக் காவல் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான், அந்த மூதாட்டி உயிரிழந்து சுமார் நான்கு நாட்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறையான மருத்துவ அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:38 pm
பெட்ரோல் மானியங்கள் விவகாரத்தில் பழைய மூட நம்பிக்கைகளுடன் நம்மால் வாழ முடியாது: ரபிசி
April 14, 2026, 3:20 pm
