செய்திகள் மலேசியா
ஏப்ரல் 15 முதல் கேடிஎம்பி பயணிகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும்: அந்தோனி லோக்
புத்ராஜெயா:
நாளை ஏப்ரல் 15 முதல், வார நாட்களில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கேடிஎம்பி டிக்கெட்டுகளில் 30% தள்ளுபடியைப் பெறலாம்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தள்ளுபடி, அனைத்து மின்சார ரயில் சேவை (ETS) பிரிவுகளுக்கும், அத்துடன் ஜொகூர் சென்ட்ரல் முதல் தும்பாட் வரையிலான வழித்தடத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் ரக்யாட் திமுரான் (ERT) சேவைக்கும் பொருந்தும்.
இந்த முன்னெடுப்பு திங்கள் முதல் வியாழன் வரையிலான பயணங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் வசதியான, பாதுகாப்பான, திறமையான ரயில் சேவையை வழங்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு, கே.டி.எம்.பி வழியாக மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.
மலேசியர்களுக்கு ரயில் பயணத்தை முதன்மைப் போக்குவரத்து முறையாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இது பயணச் செலவுகளைக் குறைக்கவும், பொதுமக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கவும், மேலும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்து அமைப்புக்கான நாட்டின் செயல்திட்டத்திற்கு ஆதரவளிக்கவும் உதவும்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:38 pm
பெட்ரோல் மானியங்கள் விவகாரத்தில் பழைய மூட நம்பிக்கைகளுடன் நம்மால் வாழ முடியாது: ரபிசி
April 14, 2026, 3:20 pm
