செய்திகள் மலேசியா
திரெங்கானுவில் 3 வயது சிறுவன் பலி: வளர்ப்புத் தந்தை உட்பட மூவர் கைது
திரெங்கானு:
கோலா திரெங்கானு பகுதியில் மூன்று வயது ஒன்பது மாதங்களே ஆன சிறுவன் ஒருவன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் வழக்கில், அவனது வளர்ப்புத் தந்தை உட்பட மூவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புக்கிட் பயோங் சுகாதாரச் சிகிச்சையகத்திற்குக் கொண்டு வரப்பட்ட அந்தச் சிறுவன், ஏற்கனவே நினைவு இழந்த நிலையில் இருந்ததாகவும், பரிசோதனையில் அவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்டக் காவல் உதவி ஆணையர் அஸ்லி முஹம்மத் நூர் தெரிவித்தார்.
சிறுவனின் உடலில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், நெஞ்சுப் பகுதி, இரு தொடைகளிலும் காயங்களும் வீக்கங்களும் இருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வலது தொடையில் ஏற்பட்ட எலும்பு முறிவு, தசை, இரத்த நாளங்களை அழுத்தியதால் ஏற்பட்ட 'அக்யூட் லிம்ப் இஸ்கேமியா' (Acute Limb Ischemia) எனும் இரத்த ஓட்டத் தடை பாதிப்பினால் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
காயங்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காததே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 30 முதல் 50 வயதுடைய இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இன்று முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட உள்ளனர்.
இந்த வழக்கு 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:38 pm
பெட்ரோல் மானியங்கள் விவகாரத்தில் பழைய மூட நம்பிக்கைகளுடன் நம்மால் வாழ முடியாது: ரபிசி
April 14, 2026, 3:20 pm
