செய்திகள் வணிகம்
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
புதுடெல்லி:
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவடைந்தது.
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலை இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. அதன்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் 1,414 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 76,135 என்ற நிலையில் உள்ளது.
இதே போல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, சுமார் 407 புள்ளிகள் சரிவடைந்து 23,643 என்ற நிலையை எட்டியது. நிஃப்டியும் முந்தைய வர்த்தக நாளில் 24,050.60 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ்ஸும் நிஃப்டியும் கடுமையாக சரிவடைந்தது.
இதனால் டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
