செய்திகள் வணிகம்
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
சியோல்:
ஸ்டார்பக்ஸ் கொரியா (Starbucks Korea) நிறுவனம் அண்மையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய Tank Tumblers குவளைகளை அறிமுகம் செய்துள்ளது.
இதனால் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சொன் ஜுங் ஹியுன் (Son Jung-hyun) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
1980ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தென்கொரிய ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்களும் மாணவர்களும் 10 நாள்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் பொதுமக்களில் 165 பேர் கொல்லப்பட்டனர்.
376 பேர் காயமடைந்து பிறகு மாண்டனர்.
அந்தச் சம்பவத்தின் 46ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் "Tank Day" என்ற பெயரில் புதிய குவளைகள் நேற்று வெளியிடப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவ வாகனங்களால் நசுக்கியதை "Tank Day" குறிப்பதாகக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதையடுத்து ஸ்டார்பக்ஸ் கொரியா, CEO வை நீக்கியதோடு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
