செய்திகள் வணிகம்
தங்கம் வாங்குவதைத் தவிர்க்க சொன்ன மோடியின் கருத்தால் இன்று மும்பை பங்கு சந்தை சரிந்தது
மும்பை:
தங்கம் வாங்குவதைக் குறைக்க மோடி வலியுறுத்திய நிலையில், இன்று காலை பங்குச் சந்தைகள் தொடங்கியதும் தங்க நகைகளின் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
மற்ற இறக்குமதிகளைப் போல, இது தொழிற்துறை அல்லது உற்பத்திக்கான இறக்குமதியாக இல்லாததும் அந்நியச் செலாவணி கையிருப்பை நேரடியாக பாதிப்பதுமாக உள்ளது.
ஒருபக்கம், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.15 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், எட்டாக்கனியாகிவிட்ட தங்கத்தை வாங்குகள் என்று சொன்னாலும் வாங்க முடியாத நிலையில் ஏழைகள் இருக்கிறார்கள். மற்றொருபக்கம் செல்வச்செழிப்பில் தங்கத்தை வாங்குவதை பொழுதுபோக்காகக் கொண்டிருப்பவர்கள் மோடியின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்களா என்ற கேள்வியும் உருவாகிறது.
அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில் பிரதமரின் கோரிக்கை மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் - அமெரிக்க போர் காரணமாக, உலகளவில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு முறை போர் நிறுத்தம் உறுதி செய்யப்படாதபோதும், தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிறது.
சர்வதேச அளவில் தங்கம் விலை உயரும்போது, இந்தியாவில் அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும்போது அந்நியச் செலாவணி உயர்கிறது. போர்க் காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், தங்கம் வாங்குவது அந்நியச் செலாவணி கையிருப்பை பாதிக்கிறது.
இவையெல்லாம் பொருளாதாரக் காரணிகள். ஆனால், தங்கம் வாங்குவது என்பது இந்திய நாட்டின் கலாசாரத்தில் ஊறிப்போயிருக்கும் விஷயம். திருமணத்துக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்றால், தங்கம் போடாமல் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா?
எத்தனையோ மாற்றங்கள் நிகழ்இந்த ஓராண்டில் தங்கம் வாங்காமல் இருந்துவிட்டு, அடுத்த ஆண்டு தங்கம் விலை இன்னமும் உயர்ந்தபிறகு வாங்கினால் அதற்கு மத்திய அரசு இழப்பீடு தருமா?
பெரும்பாலான மக்கள் வாங்குவது கிராம் முதல் சில சவரன்கள்தான். அவர்களது அவசிய மற்றும் அத்தியாவசியத் தேவைக்காகத்தான் வாங்குகிறார்கள். அதனை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறாரா பிரதமர் மோடி அல்லது கஜானாக்களில் வாங்கிக் குவிக்க கிலோவில் வாங்கும் பணக்காரர்களை சொல்கிறாரா? என்பதில்தான் விளக்கம் தேவைப்படுகிறது என்கிறார்கள் மக்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
