செய்திகள் வணிகம்
Starbucksஇல் செல்லப் பிராணிகளுக்கு இடமில்லையா? சிங்கப்பூரில் எதிர்ப்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள்: மன்னிப்பு கேட்டது நிர்வாகம்
சிங்கப்பூர்:
ஈஸ்ட் கோஸ்ட் (East Coast) பூங்காவில் அமைந்திருந்த Starbucks கடையில் இங்கு செல்லப்பிராணிகளை இடமில்லை என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.
மே 25ஆம் தேதி முதல் கடைக்கு உள்ளே, வெளியே இரு இடங்களிலும் செல்லப் பிராணிகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பு செல்லப்பிராணி வைத்திருப்பவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
முகநூலில் பகிரப்பட்ட அந்த அறிவிப்பு பல விமர்சனங்களைப் பெற்றது.
"இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் ஒருவர்.
"இனி சிங்கப்பூரில் இருக்கும் எந்த Starbucks கடைக்கும் செல்லப்போவதில்லை," என மற்றொருவர் கண்டித்தார்.
வழிகாட்டி நாய்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது Starbucks சிங்கப்பூர், செல்லப் பிராணிகள் கடைகளுக்குள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அறிவிப்பு ஏற்படுத்திய குழப்பத்திற்கு Starbucks மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
தற்போது கடையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செல்லப் பிராணிகள் தமது வளாகத்திற்குத் தொடர்ந்து வரவேற்கப்படும் என்றும் அது தெளிவுபடுத்தியது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
